business

img

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 11% இல் இருந்து 15% ஆக உயர்த்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 11 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. சுங்க வரி 10 சதவீதம் என்ற அளவிலும், 5 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விலையுயர்ந்த உலோகங்கள் அடங்கிய வினையூக்கிகள் மீதும் இறக்குமதி வரியானது 14.35 சதவிகிதம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, அடிப்படை சுங்க வரி 10 சதவிகிதம் என்ற அளவிலும், 4.35 சதவிகிதம் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இறக்குமதி வரி உயர்வு ஜனவரி 22 முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
 

;